சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், அக்கட்சியைச் சேர்ந்த எர்ணாவூர் நாராயணன் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் எர்ணாவூர் நாராயணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கி சரத்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கரு.நாகராஜன், ஐஸ்கவுஸ் தியாகு, மாவட்ட செயலாளர்களாக இருக்கும் ராஜா, பிரசாத் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அவசரக்கூட்டம் நாளை சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் சரத்குமார் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment