அகில இந்தி சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு சரத்குமாருக்கு உரிமை இல்லை என்று அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார். கட்சி விதிகளை மீறியதால் எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் மன்றத்தில் பேசிய எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து என்னை நீக்கியது சட்டப்படி செல்லாது. என்னை கட்சியிலிருந்து நீக்கும் உரிமை சரத்குமாருக்கு இல்லை எனவும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அதிமுகவிற்கு எதிராக எம்.எல்.ஏ பதவியில் இருந்து என்னை ராஜினாமா செய்யச்சொன்னார். நம்ம சமுதாயத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது அதிமுக. அதனால், அதிமுகவிலிருந்து வெளியேறக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேலும், பாஜக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே என்னை கட்சியை விட்டு சரத்குமார் நீக்கினார் என்று குற்றம்சாட்டினார். மாவட்ட செயலாளர்களில் 20 பேர் என்னை ஆதரிக்கிறார்கள். அதனால், சரத்குமாருக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்டுவேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, எர்ணாவூர் நாராயணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அதை சந்திக்க தயார் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment