உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி 27வது இடம் பிடித்துள்ளார். ‛மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
பில்கேட்ஸ் முதலிடம் : உலகின் முன்னணி 50 பணக்காரர்களின் பட்டியலை வெல்த்-எக்ஸ் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ‛மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.95 லட்சம் கோடி(8,740 கோடி டாலர்கள்). இப்பட்டியலில் 2வது , 3வது இடங்கள் முறையே ஸ்பெயின் தொழிலதிபர் அமென்சியோ ஆர்டிகா (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி), அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட் (சுமார் ரூ.4.1 லட்சம் கோடி) இடம் பிடித்துள்ளனர்.
3 இந்தியர்கள் : உலக பணக்காரர்கள் வரிசையில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 27வது இடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி(2,480 கோடி டாலர்கள்). ‛விப்ரோ' நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி (சுமார் ரூ.1.12 லட்சம் கோடி) 43வது இடத்திலும், ‛சன் பார்மா' நிறுவன இயக்குநர் திலீப் சங்வி (சுமார் ரூ. 1.11 லட்சம் கோடி) 44வது இடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment