Latest News

தமிழ்நாடு சிவில் சப்ளையில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்தது எப்படி ஒரு ஷாக் ரிப்போர்ட்....! ( படங்கள் )

கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலிசார் கிருஷ்ணகிரி நான்குவழி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது., திருவண்ணாமலை மேம்பாலம் அருகே... டிஎன்.30 பி.6480 என்ற எண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் அத்திபள்ளிக்கு கடத்த முயன்ற 11200 கிலோ எடை கொண்ட 234 ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிபட்டது, இதன் மதிப்பு 11 டன் அரிசி.  

ஆய்வாளர் இளங்கோவன் விசாரனையில்., ஓசூரை சேர்ந்த லாரி டிரைவர் சுயல் மற்றும் ஓசூர் நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் முனிச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் உணவு பொருள் தர ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும்  குடோன் கிளெர்க் ராமன் உதவியுடன் கர்நாடக மாநிலம் அத்திபள்ளியை சேர்ந்த ஜகன் என்பவர்க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

நேரடியாக கடத்தலில் ஈடுபட்ட வெங்கேடன், ராமன், முனிசந்திரன், டிரைவர் சுயல் மற்றும் பாபு ஐந்து பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பட்டுள்ளது. இதில் மேலும் தொடர்புடைய அத்திப்பள்ளியை சேர்ந்த ஜகன் மற்றும் வாகன உரிமையாளர் மாலிக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

புகார் மனுக்கள்....

மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  அரிசியில் 11 டன் கடத்துவது என்பது மிகப்பெரிய விஷயம் இது எப்படி நடந்தது என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை..? இது குறித்து சிவில் சப்ளை அதிகாரிகள் மட்டத்தில் நமது விசாரனை மேற்கொண்டபோது.., 11டன் அரிசி கொஞ்சம்தான் மாதம் தோறும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சுமார் 250 டன் அரிசி கடத்தப்படுகின்றது. இது தொடர்பாக பல புகார்கள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சிவில் சப்ளை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்து குவிந்துள்ளது. ஆனால் இதுநாள் வரை நடவடிக்கையே இல்லை என்றார் ஒரு நேர்மையான அதிகாரி.

அரிசி கடத்தல் நடப்பது எப்படி...?

தொடர்ந்து பேசிய அந்த அதிகாரி...  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிகோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை மொத்த 5 சிவில் சப்ளை குடோன் இதில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை சிறிய குடோன். சிவில் சப்ளை குடோனுக்கு வரும் ஒரு மூட்டை அரிசியின் அளவு 50 கிலோ 665 கிராம் இருக்கவேண்டும், இதில் 665 கிராம் என்பது சாக்கு பையின் அளவு ஆகும். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1200 ரேஷன் கடைகள் உள்ளது, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் மாதம் தோறும் வரும் அரிசி மூட்டையின் அளவு 50 கிலோ 665 கிராமம் என்பதற்கு பதிலாக.... சாக்கு பையுடன் சேர்த்து வெறும் 49 கிலோ எடை மட்டுமே இருக்கும். இதை நீங்க எந்த ரேஷன் கடை ஊழியரை கேட்டாலும் ஆம் என்ற பதில்தான் வரும். இப்படியாக மீதியாகும் 1 கிலோ அரிசியில்தான் ஊழல் மையமே ஆரம்பாகும். இப்படி மீதம் ஆன அரிசியில்தான் 11 டன் அரிசி கடத்தும்போது மேற்கொண்ட 5பேர் சிக்கியுள்ளனர். 

சரி, செய்திக்கு வருவோம்.., கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவில் சப்ளைக்கு தமிழ்நாடு அரசு மூலமாக, தமிழக அரசு கொள்முதல் செய்து கொடுக்கும் அரிசி, மத்திய அரசின்  அந்தோதைய அண்ண யோஜனா திட்டத்தின் மூலம் வரும் அரிசி மற்றும் மூத்த குடிமக்களுக்காக வழங்கப்படும் ஒஏபி அசிரி என மூன்று திட்டங்களில் இருந்து சுமார் 9ஆயிரம் டன் அரிசி வருகின்றது. (இதில் கோதுமை தனி) 

50 கிலோ 665 கிராம் அளவு கொண்ட ஒரு மூட்டை அரிசிக்கு, ஒரு கிலோ அரிசி சுரண்டுவதால் சுமார் 250 டன் அரிசி மாதம் தோறும் ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளிக்கு கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.     

சிவில் சப்ளையில் இப்போது எல்லாம் ஆன்-லைன்தான்.  இதனால் குடோன் ஸ்டாக், மற்றும் ரேஷன் கடை ஸ்டாக் ஒரே அளவாக இருக்கவேண்டும்.  ஆனால் ரேஷன் கடை அளவு சரியாக இருக்கும், ஆனால் குடோன் அளவு எப்போதுமே ஆன்லைனில் மட்டுமே சரியாக இருக்கும். குடோனில் யார் கேட்க போகிறார்கள் பார்க்க போகிறார்கள் என்ற தைரியம் காரணம், மேலிடம் வரைக்கும் கப்பம் போகிறதே.... என்பதுதான். 

சரி,  எப்படி  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் கண்ணீல் மண்ணை தூவிவிட்டு கடத்துகிறார்கள் என்றால்...? போலியாக ஆன்லைன் பில்களை தயார் செய்து கொண்டு ஓசூர் மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி சப்ளை செய்வதாக சொல்லி குடோனில் இருந்து அரியை கடத்தி விற்பனை செய்துள்ளனர். மாதம் தோறும் பல கோடி ரூபாய் இதன் மூலம் கொள்ளை அடித்துள்ளனர். மேலும் இந்த 5 குடோன்களை விட்டு இந்த 5ஆய்வாளர்களும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்து வந்துள்ளனர். 

இப்படி கிருஷ்ணகிரி (குடோன்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் உணவு பொருள் தர ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும்  குடோன் கிளெர்க் ராமன் ஆகியோர்  அரிசியை கடத்தும்போது பாதுகாக்க வேண்டியவர்களே கடத்தல் சிக்கியுள்ளனர். குடோன் ஆய்வாளர் வெங்கடேசன் தனது திருவாய் திறந்தால் பல முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள். 


நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.