அதிமுகவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் கொடுத்து சசிகலா தூக்கிவிடப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழுவில் சசிகலா கலந்துகொள்ளாத அளவுக்கு கழற்றிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட கால தோழி சசிகலா. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலாவும் சிறைதண்டனை பெற்றிருந்தனர். சிறையிலும் கூட ஒரே பகுதியில், ஜெயலலிதா, சசிகலா அடைக்கப்பட்டிருந்தனர். சில நேரங்களில் இருவருக்கும் நடுவே சிறு அளவில் விரிசல் ஏற்பட்டாலும், விரைவிலேயே அது சரியாகித்தான் வந்துள்ளது.
2வது இடம் இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வயது முதிர்வு ஏற்பட்டுள்ளதால், தோழி சசிகலா, அதிமுகவில், ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்திற்கு தூக்கி வைக்கப்படுவார் என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
பொதுக்குழு ஜெயலலிதா தலைமையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இதுகுறித்த முடிவு ஒருவேளை எடுக்கப்படலாம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கூட்டத்திற்கும் இந்நிலையில், திடீர் திருப்பமாக, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கே சசிகலா வரவில்லை. எப்போதுமே சசிகலா அப்படி இருந்திருந்தால் இது பெரும் விவகாரமாகியிருக்காது. ஆனால், இதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களுக்கு சசிகலா வந்திருந்த நிலையில், நேற்றுதான் மிஸ்சிங்.
அவ்வளவுதானா ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்துக்கு சசிகலா வர வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், சசிகலா, பொதுக்குழுவிற்கு வருகை தராதது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. சசிகலாவை இப்போதுள்ள அளவிலேயே வைத்திருக்க ஜெயலலிதா முடிவு செய்திருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment