மும்பையில் 10 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை தார்டுதேவ் பகுதியில் 10 வயது சிறுமி ஒருத்தி தன் தாய் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாள். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்து விட்டார். இந்த நிலையில், சிறுமியின் தாய்க்கும், அதே பகுதியில் வசித்து வரும் தார்டுதேவ் போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஜனார்த்தன் அம்பேக்கர் (வயது 52) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அவளிடம் விசாரித்தார். இதில் போலீஸ்காரர் ஜனார்த்தன் அம்பேக்கர் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியை கற்பழித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் சிறுமியை அழைத்து கொண்டு தார்டுதேவ் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு பெண் போலீசார் ஒருவரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த அவலங்களை கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து சிறுமியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தன் அம்பேக்கரை கைது செய்தனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் எஸ்.ஜெய்குமார் கூறியதாவது:– போலீஸ்காரர் ஜனார்த்தன் அம்பேக்கர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி அளித்துள்ள புகாரின்படி அவர் ஒரு மாதத்திற்கு முன்பாக கற்பழிக்கப்பட்டு இருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment