அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா சுவர்களில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான வாசகங்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு மூன்று ஆண்டு தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பியூனா பார்க்கில் உள்ள சிங் சாபாஸ் குருத்வாரா சுவர் மற்றும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீதும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதுதொடர்பாக குருத்வாரா நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பியூனா பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியை சேர்ந்த பிராடி டியூரசோ என்ற 21 வயது இளைஞரை கைது செய்தனர். அவர் மீது மத சொத்துக்களை சேதப்படுத்தியது, சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கு பிப்ரவரி 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, அவர் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.


No comments:
Post a Comment