Latest News

உலகை மயானமாக்கும் இரசாயனங்கள்

இன்று பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பழி வாங்குவது வெடிகுண்டுகளோ, அணுகுண்டுகளோ, பூகம்பமோ, வெள்ளமோ இல்லை. நாம் நம்மை அறியாமல் தினந்தோறும் உண்ணும் உணவுப்பொருட்களிலும் அழகுசாதனப் பொருட்களிலும் உள்ள இரசாயானம் தான் என்றால் அது மிகையில்லை.
இந்த இரசாயானம் ஈவு இரக்கமின்றி ஓசையின்றி அதே நேரத்தில் அதிதீவிரத்தோடு அணுஅணுவாக கொன்று கொண்டிருக்கிறது.
பாரம்பரிய விவசாயம் இருந்த இடத்தில் இன்று இரசாயான ஆதிக்கம் கொண்ட பயிர் வளர்ப்பு முறைகள் ஆடு, மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவு மருந்துகளில் கூட இரசாயனக் கலப்பு என்று நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். பயிர்களில் தெளிக்கப்படும் ஒருவகை இரசாயானம் பக்கத்திலுள்ள புல் பூண்டுகளுக்குப் பரவி அவைகளை உண்ணும் கால் நடைகளின் உடலில் சென்று அவைகளின் பால் மூலமாகக் குழந்தைகளின் உடலுக்குள் புகுந்து பலவித நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது. என்பது அறிவியலார்களின் ஆய்வு முடிவு. இரசாயானங்களுக்கு எத்தகைய வீரியம் இருந்தால் ஒரு பயிரில் இருந்து மற்ற தாவரங்களுக்கும் அவைகளிலிருந்து கால்நடைகளுக்கும் பின்பு அவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவி நோய்களை விளைவிக்கிறது என்பதை அறியும் போது நெஞ்சு பதை பதைக்கிறது. மேலும் இன்றைய வாழ்க்கை முறையில் இரசாயானங்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் உணவுப்பொருட்களில் மணமூட்டிகளாகவும், சுவையூட்டிகளாகவும், நிறமூட்டிகளாகவும், பதப்படுத்தும் பொருட்களாகவும், பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. இத்தோடு நின்றுவிடாமல் நாம் பயன்படுத்தும் ஆடம்பர அழகுசாதனப்பொருட்களிலும் இரசாயானம் பெருமளவில் கலக்கப்படுகின்றன. இந்த இரசாயானம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சீரழிவுகளை நாம் உணர்ந்துள்ளோமா? இவைகளைப் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வரும் நாடுகளிலும், வளர்சியடையா நாடுகளிலும் இல்லாமலிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. மனித குலத்திற்கு இன்று பல துன்பங்களை ஏற்படுத்தி கொடிய நோய்களுக்கு ஆளாக்குவது இரசாயானங்கள் தான் என்று பலவித ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்த இரசாயான அரக்கனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒரு சிறு முயற்சியாக இந்தக் கட்டுரை. நம் அன்றாட வாழ்க்கையில் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயானங்கள் பற்றியும் பிறவகைப் பொருட்கள் பற்றியும் பல விவரங்களை நாம் பார்ப்போம் குளிர்பானம், கொக்கோலா பானங்கள், கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், இனிப்பு வகைகள், துரித உணவு (யீணீst யீஷீஷீபீ) பதப்படுத்தப்பட்ட உணவு (ஜீணீநீளீமீபீ யீஷீஷீபீ) இவைகள் அனைத்துமே இன்று நாம் வாங்கி பயன் படுத்துவதற்கு சுலபமாக உள்ளவை. குழந்தைகளும் இவைகளைத் தான் மிகவும் விரும்புகிறார்கள் காரணம்: அவைகள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான நிறத்திலும், சுவையுடையதாகவும் இருக்கின்றது. ஆனால் இது போன்ற சுலபமாக தயாரித்த உணவுகளில் உள்ள வண்ணங்கள், சுவையூட்டிகள் மேலும் அந்த உணவில் உள்ள பிற இரசாயானப் பொருட்கள் (சிலீமீனீவீநீணீறீ கிபீபீவீtவீஸ்மீs) அனைத்தும் பயன்படுத்துகின்ற ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தீங்குகளை விளைவிக்கிறது. மனமகிழ்ச்சி அளிப்பவை இனிப்புகள். ஆனால் அதன் சுவையை விட அதன் வண்ணங்களே நம்மை கவர்ந்து இழுக்கின்றன. அதனால் விளையும் தீமைகளே அதிகம். இனிப்புகளின் மேல் வெள்ளித்தகடு என்று அலுமினியத்தையும் சேர்த்துத் தயாரித்து ஒட்டுகின்றனர். இதனால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளை நாம் உணர்வதில்லை. பிறந்த நாளா? அங்கு வெட்டப்படும் பெரிய அளவு கேக், அதன் மேல் பல வண்ணங்களில் கிரீம். வெயிலோ, மழையோ அதைப் பொருட்படுத்தாமல் ஐஸ்கிரீம் கடைகளில் அலைமோதும் கூட்டம் இவைகளில் சேர்க்கபடும் இரசாயானங்களோ பலப்பல. சாக்லெட், பிஸ்கட் இவை இரண்டையும் விரும்பாத மக்களே உலகத்தில் இல்லை. இவற்றில் வண்ணத்திற்காகவும் மணம், சுவை இவற்றிற்காகவும் சேர்க்கப்படும் இரசாயானங்கள் ஏராளம். வீடுகளில் இனிப்பு வகைகளை நாமே தயார் செய்து விடுவோம் இருந்தாலும் ஸ்வீட் பலகாரகக்கடைகளில் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. கலர்கலரான இனிப்பு வகைகளை வெள்ளிப்பேப்பரில் ஒட்டி அழகாக அடக்கி வைத்திருப்பார்கள். இந்த வெள்ளிப்பேப்பர் நம் இரைப்பை, குடல், சிறுநீர்ப்பைகள் போன்ற இடங்களில் அடைத்துக்கொண்டுவிடும் அபாயகரமானவை. விதவிதமான கலர்கள் நாவிலுள்ள சுவைமொட்டுக்களை நாசமாக்கி விடுகின்றன. மஞ்சள் கலர் ஸ்வீட் வகைகளால் அனிமியா என்ற நோயும் அலர்ஜியும் ஏற்படுகின்றன. பச்சைக்கலரால் தோல் வியாதி ஏற்படுகிறது. கத்திரிப்பூ கலர் (வயலட்) இனிப்பு வகைகள் கேன்ஸர் வரை கொண்டு போய் விடுகின்றன. அதேபோல் அல்வாவில் மலிவான விலையில் வாசனைப் பொருட்களை வாங்கி கலந்து விடுகிறார்கள் மக்கள் அந்த வாசனையில் மயங்கி வாங்கிச் சென்று அவதிப்படுகிறார்கள். குழந்தைகளும் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பருகும் குளிர்பானங்களின் உண்மைக்கதை தெரியுமா? அவற்றில் சேரும் இரசாயானங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் இருப்பதெல்லாம் அதிகபட்ச சாக்கரின், கார்பானிக் அமிலம், வேதிப் பொருட்களும், வண்ணங்களும் தான். அமிலத்தன்மை அதிகமுள்ள பானங்கள் நம் பற்களையும், எலும்புகளையும் கரைத்து ஊறு செய்கின்றன. இது நம் குழந்தைகளுக்கு தேவையா? குளிர்பானத்தின் சுவையை அதிகரிக்கச் சேர்க்கப்படுவது புரோமின் கலந்த தாவர எண்ணெய் இதனால் ஏற்படுவது குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவு, இதய அழற்சி மற்றும் பலவீனம் இன்னும் குளிர்பானங்களில் கலக்கப்படும் இரசாயானங்கள் பற்றியும் மயக்கும் வண்ணங்களால் ஏற்படும் மாபெரும் தீமைகள் பற்றியும் தொடர்ந்து வரும் மாதங்களில் தெரிந்து கொள்வோம் இன்ஷாஅல்லாஹ்!
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.