உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட முகமது இக்லாக் உண்டது மாட்டு இறைச்சி அல்ல ஆட்டு இறைச்சி என மாநில அரசு நடத்திய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த முகம்மது இக்லாக் என்பவர் மாட்டுக் கறியை உண்டதாகக் கூறி அவரது வீட்டை சுற்றி வளைத்த இந்துத்துவ வன்முறைக் கும்பல் இக்லாக்கை கொடூரமாக அடித்துக் கொன்றது.
இச்சம்பவத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில கால்நடைத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான முதல் கட்ட விசாரணையில் இக்லாக்கும் அவரது குடும்பத்தினரும் உண்டது மாட்டு இறைச்சி அல்ல ஆட்டு இறைச்சி என தெரியவந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாத்ரி படுகொலை பாஜகவினர் சிலரின் திட்டமிட்ட சதி என இந்த அறிக்கை நிரூபித்துள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment