பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய விமானப்படையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரஞ்சித். கேரளாவைச் சேர்ந்தவரான இவர், இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் மற்றறும் விமானப்படைக்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் ஆகியவற்றை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, விமானப்படையில் இருந்து ரஞ்சித் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாத்திந்தாவில் வைத்து ரஞ்சித்தை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சமூக வலைதளம் மூலம் தனக்கு பழக்கமான ஒரு பெண்ணுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்குக் கொடுத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை காவலர் உட்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் ரஞ்சித்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உறுதியாக இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment