தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன் என்று அக்கட்சியின் சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி வெறித்தனமாக பேசியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் டெல்டா விவசாயிகளுக்கும் மழை வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நேற்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தலைமை வகித்த அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், மேடை அருகே இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றுமாறு தொண்டர்களிடம் கூறினார்.
அவர்களும் அகற்றினர். இதனால் அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேமுதிகவினரின் பேனர்கள், கட்சி கொடிகளை அதிமுகவினர் எரித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி பேசியதாவது: எனக்கும், என் தலைவருக்கும் பத்திரிகையாளர்கள் மன உளைச்சல் தருகின்றனர். அவர்களை வீடு புகுந்து அடிப்பதில் தவறில்லை. என்னை கைது செய்தாலும் சரி, சிறையில் அடைத்தாலும் சரி கவலைப்பட மாட்டேன்.
தே.மு.தி.க., வையும் விஜயகாந்த்தையும் பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகை நிருபர்களின் வீடு புகுந்து தாக்குவேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்று கூறினாரே, அதன்படி ஏன் செயல்படவில்லை. இதை எந்த பத்திரிகையாளனாவது கேட்டானா? இவ்வாறு பார்த்தசாரதி பேசினார்.
No comments:
Post a Comment