தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் கூறுவது கேட்கிறது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தவிர்த்தும் பலவற்றை முதல்வர் ஜெயலலிதா செய்து வருகிறார். விலையில்லா அரிசி, பள்ளி மாணவ-மாணவியருக்கு 14 வகையான உபகரணங்களை அளிக்க ஏற்பாடு செய்தவர் முதல்வர். நத்தம் சட்டமன்ற தொகுதியில் விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மீண்டும் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் கூறுவது கேட்கிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
No comments:
Post a Comment