மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை, 16 வயது சிருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோவாவில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கோவாவில் டிவார் என்ற தீவு ஒன்று இருக்கிறது. அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் 21 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் இருக்கிறார். சம்பவத்தன்று, அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கு அச்சிறுவன், அவரின் வீட்டிற்கு சென்றுள்ளான்.
அப்போது அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது பெற்றோர்கள் வெளியே சென்றுள்ளதைப் பயன்படுத்தி அந்த சிறுவன் அப்பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளான்.
இதை தெரிந்து கொண்ட, அந்த பெண்ணின் பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்த வழக்குப் பதிவு செய்த கோவா போலிசார், அச் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment