உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில், கழிவறையில் பிறந்த குழந்தை, தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்தில், மோகன் நகர் என்ற பகுதியில் வசிப்பவர் புஷ்பா தம்பா(35). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் தனாக்பூரிலிருந்து பரேலி செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தார்.
ரயில் சென்று கொண்டிருக்கும் போது, புஷ்பா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை கழிவறையில் உள்ள ஓட்டை வழியாக கீழே விழுந்துவிட்டது. இதைக்கண்டதும் புஷ்பா அலறியுள்ளார்.
உடனே ரயிலில் இருந்தவர்கள் ரெயிலை நிறுத்தினர். மேலும், தண்டவாளத்தில் கிடந்த குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. இருவரையும், மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள்.
No comments:
Post a Comment