பிலிப்பைன்ஸ் (16-12-15): பிலிப்பைன்ஸ் நாட்டை பயமுறுத்தி வரும் சூறாவளியால் 7 லட்சம் பேர் நாட்டை வீட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுக்கு 20 முறை சூறாவளி தாக்குவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது மெலார் என்று பெயரிடப்பட்ட சூறாவளி மணிக்கு 185 கி.மீ வேகத்தில் பிலிப்பைன்ஸ் மக்களி பயமுறுத்தி வருகிறது. இதையடுத்து பலத்த காற்றுடன் வீசும் புயல் காரணமாக நிலசரிவுகள் ஏற்படக்கூடிய பாதிப்பு இருப்பதால் 7 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹயான் புயலுக்கு 8 ஆயிரம் பேர் பலியானதால், இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment