Latest News

வங்கி கணக்கு துவங்க பான் எண் கட்டாயம்!


புது டெல்லி (16-12-15): எல்லா விதமான வங்கி கணக்குகள் துவங்குவதற்கும் பான் எண் விரைவில் கட்டாயம் ஆகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருண் ஜெட்லி இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்ஜெட் உரையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் எந்தப் பொருளை ரொக்கத்துக்கு வாங்கினாலும், விற்றாலும் ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும் என்று கூறி இருந்தார்.  ஆனால் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பான் எண்ணுக்கான வரம்பை 2 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

மேலும் “ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட எந்தப் பொருளை வாங்கினாலும், விற்றாலும் பான் (PAN) எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும். உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

உணவக கட்டணம் செலுத்தவும், வெளிநாட்டு பயண டிக்கெட் வாங்கவும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால், பான் எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகள் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கினாலும் பான் எண் கட்டாயம். ஜன் தன் யோஜனா திட்டம் தவிர அனைத்து வங்கிக்கணக்கு தொடங்குவதற்கும் பான் எண்ணை தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்தகவலை வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.