சிங்கப்பூர் செயற்கைகோள் டெலியோஸ்-1 மற்றும் 5 துணை செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான “ஆன்ட்ரிக்ஸ்” வணிக ரீதியாக இதுவரை 22 நாடுகளில் இருந்து 51 செயற்கைகோள்களை விண்வெளி ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. இந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த டெலியோஸ்-1 என்ற செயற்கைகோளை பூமியின் மேற்பரப்பு ஆய்வுக்காக இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் வெலாக்ஸ்-சி1, வெலாக்ஸ்-2 என்ற 2 மைக்ரோ செயற்கைகோள்கள் மற்றும் ஏதென்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, காலஸ்ஸியா என்ற 3 நானோ சாட் செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment