பாபரி மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ட முயற்சிக்கும் பாஜக., விஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டு லாரிகளில் கற்களை இராமர் கோயில் கட்ட அயோத்திக்குள் கொண்டு சென்றுள்ளது சர்ச்சையினை மீண்டும் எழுப்புவதன் மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுத்தி தேசம் முழுவதும் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரிப், தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.
No comments:
Post a Comment