இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 3 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின் படி, வேலையில்லாதவர்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் 21 சதவீத பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 3 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டு இருக்கின்றனர் என்று அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் படித்த பெரும்பலான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டு வருவதாகவும், பிச்சையெடுத்து கொண்டு இருக்கும் பெரும்பலான இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment