சிவகாசி அருகே மதிமுக பிரமுகர் கோவிந்தராஜ் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு பிரிவினரிடையே வெடித்த மோதலை கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் தடியடி நடத்தினர்.
சிவகாசி அருகே சிந்துராஜபுரத்தில் டீக்கடை நடத்தி ஒன்றிய மதிமுக நிர்வாகியான கோவிந்தராஜ், நேற்று இரவு வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள், கோவிந்தராஜ் உடலை வாங்க மறுத்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திடீரென, கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ரமேஷ் பாண்டியனின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள், அவரது வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீயிட்டு க்கொளுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி. அரவிந்தன், போராட்டக்காரர்களை களைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், போலீசார் மீது சிலர் கற்களை வீசியதால், வன்முறையில் ஈடுபட்டர்களை களைந்து போகச்சொல்லி தடியடி நடத்தினர். மேலும், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வைகோ சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கூட்டம் சமாதானம் ஆகியது.
வெவ்வேறு சமூத்தினரிடையே ஏற்படும் மோதலைத்தவிர்க்க அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால், கட்டிடங்கள் மீதிருந்த கொடிகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
நன்றி : நக்கீரன்
No comments:
Post a Comment