தேசிய கீதமான ஜன கண மன பாடலின் டியூனை வைத்துக் கொண்டு தற்போதைய வடிவத்துக்குப் பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பாடல் வரிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கவனம் தற்போது நமது தேசிய கீதத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கீதத்தின் டியூனை மட்டும் வைத்துக் கொண்டு அதன் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என மோடிக்கு சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜன கண மன பாடல் டியூனை அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் தேசிய கீதத்தின் வரிகளை மட்டும் மாற்ற வேண்டும். அந்த வரிகளுக்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்திற்காக எழுதிய பாடல் வரிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து நீங்கள் தான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 'ஆசாத் ஹிந்த்' என்ற சுதந்திர அரசையும் அமைத்திருந்தார். இதன் தேசிய கீதம் நமது தற்போதைய ஜனகன மண வடிவிலானது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளரை புகழும் வகையிலான அதிநாயகே போன்ற சில வார்த்தைகள் நீக்கப்பட்டு சற்றே மாற்றத்துடன் இருக்கும். இதையே தற்போது பயன்படுத்தலாம் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment