அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது தொடர்பான உச்ச நீதிமன்ற வழங்கியுள்ள தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்; பிறவி அடிப்படை ஏற்கத்தக்கதல்ல; பயிற்சி பெற்ற தகுதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லும் என்று தமிழ்நாடு அரசு ஆணை செல்லத்தக்கதல்ல என்று கோரும் அர்ச்சகர் சங்கத்தினர் போட்ட வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் செல்லும் என்று இத்தீர்ப்பு தெளிவாக்கி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆணை செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் போடப் பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிறவி அடிப்படையில் அர்ச்சகராக இருந்தவர் எவருடைய உரிமைப் பாதிக்கப்பட்டது என்று கருதினால், அவர்கள் கீழ் நீதிமன்றங்களுக்குச் சென்று பரிகாரம் தேடிக் கொள்ளலாம். வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு ஒரு அமைதிப் புரட்சியின் மைல் கல்லாகும்! சமூக நீதிக்கு ஜாதி - தீண்டாமை ஒழிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் இத்தீர்ப்பு! குறிப்பு: நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கி. வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment