மும்பை: துணை விமானியின் கவனக் குறைவால் மும்பையில் ஏர் இந்தியா விமான இன்ஜினில் சிக்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இரவு மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சுமார் 8.40 மணியளவில் ஹைதராபாத் நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ 619 என்ற விமானம் தயாராகிக்கொண்டிருந்தது. விமான தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இன்ஜின் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தனக்கு அளிக்கப்பட்ட சிக்னலை தவறாக புரிந்துக்கொண்ட துணை விமானி விமானத்தின் இன்ஜினை இயக்கியதால் இன்ஜின் அருகே வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் விமானத்தின் இன்ஜின் உள்ளே இழுக்கப்பட்டு பலியானார். இந்த விபத்தில் பலியான ஊழியருக்கு ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியான ஊழியரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவி செய்யப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment