திருநின்றவூரில் தண்ணீர் தேங்கி நிற்க திமுகதான் காரணம் என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பொய் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திருநின்றவூரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க திமுக அரசாணையே காரணம் என கூறி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 1990 ஆம் ஆண்டில் முந்தைய தி.மு.க. அரசால் வெளியிடப்பட்ட அரசாணை திருநின்றவூரில் தண்ணீர் தேங்க காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்ய அப்போது கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்: செய்தியாளர் :- திருநின்றவூரில் தண்ணீரில் தேங்கி நிற்க தி.மு.அரசுதான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை விடுத்திருக்கிறாரே? பதில்: நாடாளுமன்றத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி மத்திய அமைச்சர் கூறியதற்கு அவரோ, முதலமைச்சரோ என்ன கூறுகிறார்கள்? அதை விட்டு விட்டு இவர் ஏதோ பொய் கூறுகிறார். செய்தியாளர் :- கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்றம் கூடி நடந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக் கட்டு பற்றி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று அப்போதெல்லாம் வலியுறுத்தாத முதல் அமைச்சர் இன்றைக்கு நாடாளுமன்றம் முடிகிற நேரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜல்லிக்கட்டு பற்றி இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இன்றையதினம் எங்களுடைய இந்தத் தீர்மானம் வரப்போகிறது என்று எப்படியோ அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய புலனாய்வுத் துறையினர் நன்றாக பணியாற்றியிருக்கிறார்கள். இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
No comments:
Post a Comment