வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க மேலும் 9 தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறியுள்ளதாவது: புனேவில் இருந்து 4 குழுக்களும், கவுகாத்தியில் இருந்து 5 குழுக்களும் சென்னை விரைந்துள்ளன. மேலும் 5 குழுக்கள், பாட்னாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் இடங்களில் அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது. இதனிடையே, ராணுவம் மேற்கொள்ளும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, முடுக்கிவிடுவதற்காக ராணுவ தளபதி தல்பீர்சிங் சென்னை வந்துள்ளார். அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.


No comments:
Post a Comment