பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வர்.ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06 காசுகளும் குறைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment