இந்தியாவில் 100 கோடி செல்போன் இணைப்புகள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 120 + கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்திலேயே இந்தியாவின் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டு விட்டதாக டிராய் தெரிவித்துள்ளது. அதி வேகமாக இந்தியாவில் செல்போன் துறை வளர்ந்து வருவதாகவும், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் செல்போன் சந்தாதாரர்கள் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
அதிகரிப்பு... சமீப காலமாக இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களைக் குறைத்ததைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது. கூடுதலாக... கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 70 லட்சம் செல்போன் இணைப்புகள் கூடுதலாக சேர்ந்துள்ளன என்று கணக்கு கூறுகிறது. இந்த திடீர் உயர்வுதான் மொத்த எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்த உதவியுள்ளது. சீனர்கள்... ஆனால் இந்த விஷயத்தில் நம்மை சீனா கடந்த 2012ம் ஆண்டிலேயே முந்தி விட்டது. அந்த ஆண்டில்தான் சீனாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தொட்டது. பெருமை... இதுகுறித்து மத்திய ஐடி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி பிரசாத் கூறுகையில், "இது நிச்சயம் நமக்கு பெருமையான தருணமாகும். தொழில்நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக உயரத்தைத் தொட்டு வருவதை இது நிரூபிப்பதாக உள்ளது" என்றார். மொத்த எண்ணிக்கை... 100 கோடி என்பது 100 கோடி இந்தியர்கள் என்று அர்த்தம் கிடையாது. மொத்த இணைப்புகளின் எணணிக்கைதான் 100 கோடிஎன்பதாகும். பீகார்... இந்தியாவில் பீகார் போன்ற மிகவும் வறுமையான மாநிலங்களில் செல்போன் பரவல் என்பது சற்று குறைவாக உள்ளதாகவும் டராய் கூறுகிறது. அங்கு 54 சதவீதத்திற்கும் கீழாக செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை உள்ளதாம். செல்போனில் இணையம்... இந்தியாவில் பெரும்பாலான செல்போன் பயன்பாட்டாளர்கள் செல்போனில்தான் இணையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். எனவே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி விஸ்வரூபத்தை எட்டியுள்ளதாகவும் டிராய் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment