பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன் என்று திமிர்த்தனமாக பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. விருகம்பாக்கம் பார்த்தசாரதி இன்று கைது செய்யப்பட்டார். இன்று விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தபோது, அரசியல் ரீதியாக கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்காமல் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து தூ என்று துப்பி அநாகரீகமாக நடந்து கொண்டார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் இந்த மோசமான செயலுக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்ட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி செய்தியாளர்கள் கூட்டமாக வீட்டை நோக்கி சென்றனர். அப்போது அங்கு கூடிய எம்எல்ஏ பார்த்தசாரதி தலைையிலான தேமுதிகவினர் பத்திரிகையாளர்கள் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில்தான் விருகம்பாக்கம் காவல் நிலையம் உள்ளது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆவார். எனது தலைவன் விஜயகாந்த்தை தாக்கிப் பேசினால் அந்த பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன். எதற்கும் பயப்பட மாட்டேன் என்று திமிர்த்தனமாக பேசியவர் இவர் என்பது நினைவிருக்கலாம்.
விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தாக்குதல்.. பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு இந்தத் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறுகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின்பேரில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவர் உள்பட 100 தேமுதிகவினர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளோம். இப்போது பார்த்தசாரதி உள்பட 18 பேரைத்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயகாந்த் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்ய வேண்டும். அவர் சொல்லித்தான் தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர். ரவுடிகள் போல தேமுதிகவினர் பொது இடத்தில் பத்திரிகையாளர்களைத் வெறி கொண்டு தாக்கிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒரு தேமுதிக தொண்டர் செய்தியாளர் ஒருவரை கழுத்தில் ஓங்கி அடித்ததில் அவர் தடுமாறி நிலை குலைந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
வீடியோ இணைப்பு:
No comments:
Post a Comment