டெல்லியில் நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ள கார்களுக்கான ஒற்றை - இரட்டை இலக்க விதி செயல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்று 200-க்கும் மேற்பட்ட உயர் அதிகரிகள் ஒரே நாளில் விடுமுறை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம் என டெல்லி மாநில புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உயர் அதிகரிகள் ஒரே நாளில் விடுமுறை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நேற்று 2 உயர் அதிகாரிகளை டெல்லி அரசு இடைநீக்கம் செய்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது. டேனிக்ஸ் சங்க உறுப்பினர்களான சிறப்பு செயலாளர்கள் சுபாஷ் சந்திர மற்றும் யஷ்பால் கர்க் ஆகியோர் டெல்லி அரசு ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததால் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, ஒற்றை- இரட்டை கார்கள் திட்டத்தை அமல்படுத்த உள்ள நிலையில் ஏன் ஒரே நாளில் உயரதிகாரிகள் மொத்தமாக விடுப்பு எடுக்க வேண்டும்.என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டெல்லியின் துணை ஆளுநருடன் டேனிக்ஸ் சங்கம் பேச்சு நடத்தியுள்ளது மூலம் அவர்களின் கூட்டு சதி வெளிபட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லி அரசுக்கும் ஆளுநர் நஜீப் ஜங் மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment