மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் !
அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் V.M அலி அக்பர். இவரது மகன் ஆசிப் அஹமது ( வயது 23 ). ( படத்தில் மஞ்சள் சட்டை அணிந்து இருப்பவர் ) அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பிஜிடிசிஏ படித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தும் இவர் மாநிலம், மாவட்டம் அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக வாலிபால் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி பிறந்த ஊருக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
இந்த நிலையில் 2015-2016-ஆம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் பலவேறு பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வாலிபால் போட்டியில் அதிரை அடுத்துள்ள நாட்டுச்சாலை வாலிபால் கிளப் அணியின் ஆல் ரவுண்ட் பிளையராக ஆசிப் அஹ்மது விளையாடினார். இவரது அபார ஆட்டத்தால் இவரது அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியது.
இதையடுத்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திரு. முனைவர் என்.சுப்பையன் கலந்துகொண்டு தலைமை உரை நிகழ்த்தினார். விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ரெங்கசாமி, மாநகர மேயர் சாவித்திரி கோபால், உள்ளாட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், ரொக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சுப்பு நன்றி கூறினார்.
நன்றி ; அதிரைநியூஸ்

No comments:
Post a Comment