கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 6 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்காளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். கேரளாவில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வும் சில இடங்களில் போட்டியிட்டது.
இவர்களில் இடுக்கி மாவட்டத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரவீணா, உஷா, பாலகிருஷ்ணன் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹெலன்மேரி, ஸ்ரீரஞ்சனி, சரஸ்வதி ஆகிய 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment