இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இன்றிரவு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என இண்டர்போல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அங்குள்ள உள்ளூர் விமான நிலையங்கள் மூடப்படுகின்றன. மும்பை தொடர் குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் இந்தோனேஷியா பாலி தீவில் கடந்த மாதம் 25-ம் தேதி பிடிபட்டார். இந்தோனேசியா போலீசாரின் பாதுகாப்பில் உள்ள அவரை இந்தியா அழைத்து வர சனிக்கிழமை மாலை சி.பி.ஐ. குழு இந்தோனேசியா சென்றது. அவர்களுடன் டெல்லி, மும்பை போலீசாரும் சென்றனர். இந்த குழு ஞாயிற்றுக்கிழமை காலை பாலி சென்றடைந்தது.
பாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை இந்த குழுவினர் சந்தித்தனர். அதன் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து வேலைகளிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், சோட்டா ராஜன் உயிருக்கு தொடந்து அச்சுறுத்துல் இருப்பதால் அவரை ஏர்போட்டுக்கு அழைத்து வரும் வழியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி விமான நிலையத்திற்கு அவர் வரும்போது உள்ளூர் விமான நிலையத்தின் சேவையையும் தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளனர். சோட்டா ராஜனுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்றிரவே அல்லது நாளை காலை மும்பை அழைத்து வரப்படும் சோட்டா ராஜன், ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:
Post a Comment