பீகார் தேர்தல் முடிவுகள் என்பது சகிப்புத்தன்மை சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். அவருக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மமதா, நிதிஷ்குமார், லாலு ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பீகார் வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றி சகிப்புத்தன்மைக்கு கிடைத்த வெற்றி. சகிப்பின்மை சக்திகளுக்கு கிடைத்த தோல்வி என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment