சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 5.30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தை சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகம் படும்படி ரவி, பரதன் என்ற இருவர் வந்தனர். அவர்களிடம் உடமைகளை சோதனை செய்த போது பயணியிடம் இருந்து 75 லட்சம் மதிப்புள்ள சுமார் இரண்டரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் ரவி, பரதனையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, அந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 5.30 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சமீப நாட்களாக வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி வருவது அதிகமாகி கொண்டு இருப்பதால், சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமா கண்காணித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment