குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை,காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த தாழ்வு மண்டலம் புயலாகவும் மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. அங்கு முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கனமழையையொட்டி புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை, காரைக்கால், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment