பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அன்புடையீர்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அமீரக TIYAவின் நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் 05.11.2015 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு அமீரக தலைவர் N.முகமது மாலிக் அவர்கள் தலைமையில் மற்றும் நிர்வாகிகள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மிக சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
விவாதிக்கப்பட்ட விசயங்கள் :
தாயகத்திற்க்கு விடுப்பில் சென்று வந்த அமீரக தலைவர் தாயகத்தில் நடைபெற்ற விசயங்கள் குறித்து விவரித்து சொன்னார்.
கடந்த ஆண்டை போல் 2015 ஆம் ஆண்டுக்கான TIYA வின் குர்பானி தோல் வசூல் விசயமாக விரிவாக எடுத்து வைத்தார்கள்.
தாயகம் சென்றிருந்த அமீரக தலைவர் அவர்களிடம் நமது மஹல்லா இளைஞர்கள் உடற்பயிற்சி மையம் மற்றும் நூல் நிலையம் அமைப்பது தொடர்பாக விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை வைத்த விசயத்தையும் விரிவாக விவரித்து சொன்னார்கள்.
அமீரக TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 2016 ஜனவரி 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இன்னும் நமது மஹல்லாவின் நலனில் அக்கறை கொண்டு பல நல்ல விசயங்கள் விவாதிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
என்றும் அன்புடன்
அமீரக TIYA
தலைவர் மற்றும் நிர்வாகிகள்


No comments:
Post a Comment