நேபாள நாட்டில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகினர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நேபாள அரசின் உயர் அதிகாரி சிவராம் கேலால் கூறுகையில, கிழக்கு நேபாளத்தில் ராம்சே கிராமத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப் பாதையில் சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து 500 அடி பள்ளத்தில் விழுந்ததில், அதில் பயணித்த பயணிகளில் 30 பேர் பலியானர்கள், மேலும் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிராம மக்கள் காவல்துறையினருடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியானது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபாளத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பேருந்தின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்தது தெரியவந்துள்ளது. மேலும் நேபாளத்தில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் சாலைகள் முறையாக பராமரிக்கப்படதும் மோசமான நிலையில் இருக்கும் வாகனங்களும், தான் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment