Latest News

  

கோவனின் 2வது பாடல் முதல்வரையும், பிரதமரையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது: தமிழிசை


டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடிய கோவன் கைதுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நுஎ ஆனால் அவர் பாடியிருக்கும் இரண்டாவது கொச்சைப்படுத்தும் விதமான பாடலைக் கேட்டால் தங்களது கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியதாக கோவன் என்பவர் நடு இரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பாடலை என்னிடம் போட்டு காண்பித்தார்கள். அந்த பாடலை பார்த்த பின்புதான் அதில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு ஆட்சேபகரமாக வேறு எதுவும் இல்லை.

டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதற்காக ஏன் கைது செய்ய வேண்டும்? டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வது, எல்லோருடைய கருத்தோடு ஒத்த கருத்துத்தானே! அதனால் இதற்காக கைது அவசியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால் அதே கோவன் பாடிய மற்றொரு பாட்டை கேட்க நேர்ந்தது. அதில் டாஸ்மாக்கை மூடு என்று கருத்து சொல்லாமல் முதல்வரையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தி கேட்கத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடுவதை நோக்கமாக கொள்ளாமல் தலைவர்களை கொச்சைப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கருத்து சுதந்திரமாக இருந்தாலும் அது ஒரு வரையறைக்குள் தான் இருக்க வேண்டும், யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதும், மாற்றுக் கருத்தை விமர்சனம் செய்தாலும் அந்த விமர்சனம் மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. அதனால் கோவன் முதல் பாடல் கருத்து சுதந்திரமாகவும் மற்ற பாடல் களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அதனால் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கருத்து சுதந்திரம் என்பது எந்த வகையிலும் யாருக்கும் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் எல்லாவற்றுக்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதை கோவன் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கைதுக்கு கண்டனம் சொன்ன தலைவர்கள் கூட, தமிழக முதல்வரையும், பிரதமரையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ள அவரின் இந்த இரண்டாவது பாடலைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். கருத்து சொல்வதும், சட்டத்திற்குட்பட்டதாக இல்லையென்றால் சட்டம் தனது கடமையை செய்துதான் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்''என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.