தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஜி.க்களில் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஜ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார் காவலர் பயிற்சி ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசுப்பணியில் உள்ள ஐ.ஜி. ரவிச்சந்திரனுக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக விஜிலென்ஸ் ஏ.டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மண்டல ஐ.ஜியாக முருகனும், மத்திய மண்டல ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கோவை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. அன்பு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment