மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், வீணை, மடிக்கணினி, கைபேசி, வானொலி, கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் ராமேசுவரம் வந்து சேர்ந்தன.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசு ஒதுக் கிய டெல்லி வீட்டில் தங்கியிருந் தார். அவ்வீட்டில் கலாம் நினைவாக, ‘தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையம்’ அமைக்க வேண்டும். இதன் மூலம் கலாம் சேர்த்த நூல்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கலாமின் தொலை நோக்கு பார்வையை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள லாம் என கலாமின் சகோதரர் முத்துமீரா மரைக்காயர் பிரதம ருக்கு கோரிக்கை விடுத்திருந் தார். இந்நிலையில், கலாம் வசித்த டெல்லி வீட்டை அக்டோபர் 31-க் குள் காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தனிச் செய லருக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து கலாம் பயன்படுத்திய பொருட்கள் நேற்று மாலை ராமேசுவரம் வந்து சேர்ந்தன.
இதுகுறித்து அவரது பேரன் ஷேக் சலிம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கண்டெய்னர் லாரி மூலம் 204 பெட்டிகளில் கலாம் தாத்தா வின் பொருட்கள் வந்துள்ளன. இதில் அவர் படித்த 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும், வீணை, மடிக்கணினி, கைபேசி, வானொலி, கைகடிகாரம், சமையல் பொருட் கள் ஆகியவும் அடங்கும்.
கலாம் தாத்தா கடைசியாக ஷில்லாங்குக்கு கொண்டுபோன பயண பேக்கில் ‘பூமியை வாழத் தகுந்த கிரகம் ஆக்குவோம்' என்ற தலைப்பிலான உரை, பாரதி என் றொரு மானுடன் நூல், அரிய வகை கட்டை விரல் அளவிலான திருக்குர் ஆன் உள்ளிட்ட பொருட் கள் இருந்தன.அவர் பயன்படுத் திய நூல்களை தனி நூலகமாக வும், அவர் பயன்படுத்திய பொருட் களை பேக்கரும்பில் அமைய உள்ள கலாம் மணிமண்டபத்திலும் வைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment