திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரை வழியாக சிவகாசிக்கு அரசுப் பேருந்து சென்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தப் பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாசிக்குப் புறப்பட்டது.
பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுரை அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணி ரிங் ரோடு டோல்கேட் அருகே பேருந்து சென்றபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்ற கண்டெய்னர் பார்சல் சர்வீஸ் லாரி வந்தது. இதில் திடீரென்று பேருந்தும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பேருந்தின் முன்பகுதியும் லாரியின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் விருதுநகர் ஆர்.வி. நகரை சேர்ந்த கணேசன்(51), சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கருஞ்சுத்தியை சேர்ந்த லாரி கிளீனர் பிரபு(42), சிவகாசி புஷ்பா காலனியைச் சேர்ந்த செந்தில்குமார்(35), உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தயான் சவுகான்(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கு முன் லாரி மீது பேருந்து மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டதால் அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் முன் இருக்கைகளில் மோதி பலத்த காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் லாரி டிரைவருக்கு பதிலாக கிளீனர் லாரியை ஓட்டியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment