குறைந்த டிக்கெட் விலை, அன்னிய முதலீட்டை 50%க்கும் அதிகமாக உயர்த்துவது உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய அரசின் புதிய விமான பயண கொள்கை வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன்படி குறைந்தபட்ச கட்டணமாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2% லெவி வரி விதிக்கப்படும்; ஏர்லைன்ஸ் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகளுக்கு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த புதிய விமானப் பயணக் கொள்கை வெளியிடப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment