பாஜக தேசிய தலைவர் அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் கேட்டுள்ளார். பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவினால் அதை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது பீகார் வாக்காளர்களின் கடமையாகும் என்று பாஜக தலைவர் அமீத் ஷா நேற்று பீகார் மாநிலம் ரக்ஸால் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்.
மேலும், பீகாரி்ல் இதுவரை நடைபெற்று வந்த காட்டாட்சி மீண்டும் வேண்டுமா? எனவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என கேட்டுள்ளார். மேலும், இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமீத் ஷாவின் இந்த பேச்சு 11 கோடி பீகார் மக்களையும் அவமானப்படுத்துவதாகும். இந்த பேச்சு பீகாரில் உள்ள இந்து, முஸ்லீம், தலீத், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் அவமதிக்கும் மனப்போக்கை காட்டுகிறது.
இது ஒன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி அல்ல. பா.ஜ.க ஒன்றும் இந்தியா அல்ல, பீகார் ஒன்றும் பாகிஸ்தான் அல்ல. அமீத் ஷாவின் பேச்சு மூலம் பீகார் மக்களை பெரிதும் காயப்படுத்தி விட்டார். அதற்கு பீகார் மக்கள் வாக்கு மூலம் கடுமையான பாடத்தை பா.ஜ.கவுக்கு புகட்டுவார்கள். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் லாலுபிரசாத் நம்பிக்கையுடன் கூறினார்.
No comments:
Post a Comment