கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பரூக் முகமது தான்டியா (45) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்டது. இதில் 58 பேர் இறந்தனர். இதையடுத்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர்.
இவ்வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு 11 பேருக்கு மரண தண்ட னையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வர்களில் இருவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு தலை மறைவு குற்றவாளியான பரூக் முகமது தான்டியா நேற்று காலை கைது செய்யப்பட்டதாக கோத்ரா போலீஸார் கூறினர்.
No comments:
Post a Comment