டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்.பிக்களும், மலையாள பத்திரிகையாளர்களும் டெல்லியில் தர்ணா நடத்தினர். ஆம் ஆத்மி தலைவர்களும் அதில் பங்கேற்றனர்.
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள பவன் என்ற பெயரில் கேரள அரசின் இல்லம் செயல்படுகிறது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது, இதை நிறுத்தாவிட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் எனக்கூறி ஒரு மிரட்டல் போன் அழைப்பு டெல்லி காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால், மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்திவிடுங்கள் என கேட்டு கொண்டனர். இத்தகவல் இன்று வெளியானதும், கேரள அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment