பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியுமாகிய அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் எனவும் அவர் பாமகவின் முதல்வர் வேட்பாளர் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இல்லை எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், வருகிற 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு, பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி அமையும்; அந்த கூட்டணியின் சார்பில் அன்புமணி, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என, பா.ம.க., ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிருப்தி எழுந்தது. தமிழக பாஜக தலைவரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத பாமக மத்தியில் மோடி அரசுடன் கூட்டணி மாநிலத்தில் கூட்டணி இல்லை எனவும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம். அவ்வாறு கூட்டணியின் ஒப்புதல் பெற்ற ஒருவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மேலும், 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment