Latest News

  

தள்ளாடுது தமிழகம், போயஸ் கார்டனில் உல்லாசம்.. கோவன் பாடலை பாடி சவால் விட்ட வைகோ!


"ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் என்ற பாடலை நான் தற்போது பாடியுள்ளேன் முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான கொலை வெறி தாக்குதல், கருத்துரிமை மீதான தாக்குதல்களை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்புகளால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களால் இந்திய ஜனநாயகத்துக்கே பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாற்று சாதனையாளர்கள் கூட சாகித்ய அகடாமி விருதுகளை திரும்ப கொடுத்து வருகிறார்கள். இந்த ஆபத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அரியானா மாநிலத்தில் தலித் சிறுவர்கள் 2 பேர் வீட்டிற்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வீட்டில் வைத்திருப்பதாக கூறி இஸ்லாமிய முதியவர் ஒருவரை அடித்துக்கொன்ற சம்பவம், காஷ்மீரில் சட்டசபையிலேயே மாட்டிறைச்சி விருந்து பரிமாறியதாக எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் போன்றவை நாட்டையே பேராபத்துக்கு இழுத்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதைக்கண்டிக்காத மத்திய அமைச்சர் வி.கே.சிங், 2 நாய்களை கொன்றால் கூட பிரதமரும், பதில் சொல்ல வேண்டுமா? என்று ஏளனமாக பேசுகிறார். இதை மோடி கண்டிக்கவில்லை. அவரை உடனடியாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ம.க.இ.க.வை சேர்ந்த பாடகர் கோவன் விலைவாசி உயர்வை கண்டித்து தான் பாடல் எழுதியுள்ளார். ஆனால் அவரை அதிகாலை 2 மணிக்கு அவரது வீட்டிற்கே சென்று போலீசார் தேச துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு மற்றும் கைது நடவடிக்கை அக்கிரமமானது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். (ஊர், ஊருக்கு சாராயம், தள்ளாடுது தமிழகம், மூடு, மூடு டாஸ்மாக்கை... என்று பாட்டுப்பாடிய வைகோ) தன் மீது வழக்கு போட்டுப்பாருங்கள், தமிழகத்தில் உள்ள 4½ கோடி பெண்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடுங்கள். தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முதல் ஆளாக மக்கள் நல கூட்டியக்கம் குரல் கொடுக்கும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ கத்தை கெடுத்துள்ளது. அவர் களை வருகிற வருகிற சட்ட மன்ற தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்றார் வைகோ.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.