பீகாரில் இன்று நடைபெற்ற 3வது கட்ட சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் சுமார் 53.32% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகார் சட்டசபையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 81 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், பாட்னா, வைஷாலி, சரண், நாளந்தா, பக்ஸார், போஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு 3ஆவது கட்டமாக இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
808 வேட்பாளர்கள் பீகாரில், ஐக்கிய ஜனதாளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும், பாரதிய ஜனதா, லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட 808 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில், 71 பேர் பெண்கள். விஐபி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் (பாட்னா சாஹிப் தொகுதி), அமைச்சர்கள் ஷியாம் ரஜக் (புல்வாரி), சிராவண் குமார் ( நாளந்தா), சட்டசபை துணைத் தலைவர் அமரேந்திர பிரதாப் சிங் (அரா), பாஜக சட்டசபை கொறடா அருண்குமார் சின்ஹா (கும்ரர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். பதற்றமான வாக்குச்சாவடிகள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை 1.45 கோடி பேர் பெற்றிருந்தனர்.
இத்தேர்தலையொட்டி 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டன. வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்துச் சாவடிகளிலும், மாநில போலீஸாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினர் 1,107 படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேரடி ஒளிபரப்பு வாக்குச்சாவடிகளை ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர்த்து, வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், 716 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்களித்த வி.ஐ.பிக்கள் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி ஆகியோர் தங்களது வீடுகளுக்கு அருகில் இருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். நண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீதம் வாக்குகள் பதிவானதாக பீகார் மாநில தலைமை தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 50 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வந்தது. மாலை 5 மணிவரை மொத்தம் 53.32% வாக்குகள் பதிவாகி இருந்தன. நவம்பர் 8ல் ரிசல்ட் 4ஆவது கட்டத் தேர்தல், நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 5ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment