அன்புடையீர் :
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) சார்பாக நமது மஹல்லாவாசிகளிடம் குர்பாணி
தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற
முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கி
வருகிறோம், அனைத் தொடர்ந்து சென்ற ஆண்டும் நமது மஹல்லாவாசிகளிடம்
TIYAவின் சார்பாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் மஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துளைப்போடும்
நமது மஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினாலும் தாஜுல் இஸ்லாம் சங்கம்,
மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் நிர்வாக குழு மற்றும் செயற் குழு
உறுப்பினர்கள் ஆகியோரின் பெரும் பங்களிப்பினால் அல்லாஹ்வின் உதவியால் சென்ற வருடம்
124 தோல்கள் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்
ஒருவனுக்கே.
மேலும் நமது மஹல்லாவின் நலனை வேண்டி இன்னும் பல நல்ல செயல்
திட்டங்களை இறைவன் கிருபையால் செய்ய உள்ளோம்,
உங்களின் மேலான நல்ல கருத்துக்களையும் ஆதரவுகளையும் எங்களுக்கு வழங்கிடவேண்டும்
நமது தெருவின் நலனை வேண்டி உங்களின் மேலான ஆலோசனைகளையும் உங்களின் ஆதரவுகளையும் நாங்கள்
எதிர்பார்க்கிறோம். உங்களின் ஒத்துளைப்பும் எங்களுக்கு இருந்தால்
இது போன்று பல நல்ல திட்டங்கள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் உலக முழுவதும் வாழும்
நமது மஹல்லாவாசிகள் அனைவரும் தங்களின் நல்ல கருத்துக்களை எங்களுக்கு வழங்கிடவும்.
சென்ற வருடம் விபரம்.
மொத்தம் தோல் வசூல்
- 125
அதில் 10 தோல் டேமேஜ்
ஒரு தோல் விலை
300
115
தோல் பணம் வரவு 35000
ஜமாலுதீன் 1000
P.M.K.
தாஜுதீன் காக்கா
500
B.ஜலால் வரவு 300
V.T.
அஜ்மல்கான்
2000
குவைதிலிருந்து சகோ.
பாவா பகுருதீன் மாதந்தோறும் ரூபாய் 2000 விதம்
வருடத்திற்க்கு 24000 ரூபாய்
மொத்த வரவு 62,800
நபர் ஒன்று மாதம்
400 விகிதம் 13 நபருக்கு 5200
ஒரு வருடத்திற்க்கு
62,400 ரூபாய் விதம் அல்லாஹ்வின்
கிருபையால் வழங்கி வருகிறோம்
நமது மஹல்லா இன்னும் மேண்மை அடைய எங்களால் இயன்ற அளவு நாங்கள்
பாடுபட தயாராக உள்ளோம் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதியை நமது மஹல்லா
மக்களிடமிருந்து பெற்று எந்த நோக்கத்திற்காக நிதி பெறப்பட்டதோ அதே நோக்கத்திற்காக
செலவு செய்வருகின்றோம், உங்களின் மேலான கருத்துக்களும் ஒத்துளைப்புகளும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கும் நமது மஹல்லா சகோதரர்கள்
நமது மஹல்லாவின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையுன் செயல்பட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொகிறோம்.
மேலும் உங்களின் மேலான நல்ல பல
கருத்துக்களை எங்களுக்கு வழங்கிடுமாறு அன்புடன் தெரிவித்து கொகிறோம், கருத்துக்கள் தெரிவிக்க
வேண்டிய ஈமெயில் ஐடி tiyawest@gmail.com
சென்ற ஆண்டு
நமது மஹல்லா இளைஞர்கள் பம்பரம் போல் சுழன்று துடிப்புடன் செயல்பட்டது போல் இந்த ஆண்டும்
செயல்பட வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம் அமீரகம்&அதிரை
No comments:
Post a Comment