பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
1427. ரூ 1428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
என்று வருகின்ற மேற்படி ஹதீஸை கீழ்க்காணும் வகையில் சுருக்கியும், கூடுதல் பொழிப்புரை வழங்கியுமுள்ளேன்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவிக்கும் புகாரி ஹதீஸில் (1427) காணப்படும் கருத்தின்படி, நமது தர்மங்களை நெருங்கிய (ஏழை) உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கி வேண்டும் என வலியுறுத்துவதால் அடுத்து நமது அண்டை வீட்டார்கள், தெருவாசிகள் என நமது உதவிகளை விரிவுபடுத்தி செல்வதே சிறப்பாகும் என புரிந்து கொள்ளலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
ஆரம்பமாக, கடந்த ஆண்டுகளில் பெருமளவில் குர்பானி தோல்களை வாரி வழங்கி நமது முஹல்லாவை சேர்ந்த நிராதரவான ஏழைகள் பலர் பயன்பெற்றிட காரணமாயிருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும் என்ற துஆவுடன் துவங்குகிறோம்.
நமது முஹல்லாவை சேர்ந்த சகோதர, சகோதரிகளே! நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் நமக்கு வழங்கிய மிகப்பெரிய அருட்கொடை என்பதை அறிந்துள்ளோம். இங்கே நாம் எதை விதைத்து விளையச் செய்கின்றோமோ அதன் பயனைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய இருக்கின்றோம் என்பதை நம்பியவர்கள் நாம்.
கடந்த 9 வருடங்களாக, நமது மஹல்லாவின் நலனை கருத்திற்கொண்டு பல நல்ல திட்டங்களை தீட்டி அல்லாஹ்விற்காக சேவை செய்து வருகிறோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 வருடங்களாக நமது மஹல்லாவில் குர்பானி தோல்களை சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் தொகையை வைத்தும், குவைத்தில் பணியாற்றுகின்ற நமது மஹல்லாவை சேர்ந்த சகோதரர் ஒருவர் தருகின்ற தொகையை சேர்த்தும், நமது மஹல்லாவிலுள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோறும் வாழ்வாதார உதவித்தொகையை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.
கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடமும் ஹஜ் பெருநாள் அன்று நமது மஹல்லாவில் உங்களிடமிருந்து குர்பானி தோல்களை சேகரித்து, வருகின்ற ஆண்டும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீடிக்கவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.
எனவே, சென்ற வருடங்களில் குர்பானி தோல்களை எங்களிடம் வழங்கி பெரும் ஆதரவு நல்கியது போல் இந்த வருடமும் உங்கள் வீடுகளை தேடி வரும் TIYA பிரதிநிதிகளிடம் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் குர்பானி தோல்களை வழங்க கீழ்க்காணும் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
N.M. மன்சூர் தலைவர் -9965396352, S. அஸ்ரப் அலி துணைத் தலைவர் - 9791387079,
V.K.M. சேக்காதி துணைச் செயலாளர்- 9944640373, M. முகம்மது மாஜிதீன் பொருளாளர்- 9940816978
என்றும் உங்கள் நல்லாதரவுடன்
அமீரகம் & அதிரை TIYA நிர்வாகம்
&
தாஜூல் இஸ்லாம் சங்கம்
மேலத்தெரு, அதிரை
குறிப்பு : வெளிநாடுகளில் வாழும் நம் மஹல்லா வாசிகள் அவர்களின் வீடுகளுக்கு இந்த தகவலை தெரியப்படுத்திடவும்.
No comments:
Post a Comment